Skip to main content

Featured

விஜயகாந்துக்கு ஜன.19-ல் நினைவேந்தல் கூட்டம்: தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு

சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தன் பகழையும், திறனையும், சிந்தனையையும் மக்களுக்காக அர்ப்பணித்த, எங்கள் சங்கத்தின் தூணாய் விளங்கிய எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் 19.01.2024 அன்று மாலை 6 மணி அளவில் சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments