Skip to main content

Featured

பிரபல இந்தி நடிகரிடம் ரூ.85 ஆயிரம் மோசடி

மும்பை: பிரபல இந்தி நடிகர் ராகேஷ் பேடி. மும்பையில் வசித்துவரும் இவருக்கு பூனேவில்ஒரு வீடு இருக்கிறது. அதை விற்பதற்காக ஆன்லைன்ரியல் எஸ்டேட்தளத்தில் விளம்பரம் செய்திருந்தார். அதைக்கண்டு ஆதித்யா குமார் என்பவர் பேசினார். தான் ராணுவத்தில் பணிபுரிவதாகக் கூறிய அவர், வீட்டின் புகைப்படங்களைக் கேட்டுள்ளார். அனுப்பி வைத்தார்பேடி. மறுநாள் பேசிய அவர், தனது மூத்த அதிகாரிக்கு வீடு பிடித்திருப்பதாகவும் ரூ.87 லட்சத்துக்கு அதை வாங்கிக்கொள்ள சம்மதித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

பின்னர் பேடிக்கு ஒரு ரூபாயை அனுப்பிய அவர், சரிபார்ப்பதற்காக அனுப்பினேன் என்று தெரிவித்துள்ளார். பின்னர் ரூ.50 ஆயிரம் அட்வான்ஸ் அனுப்ப வேண்டும், அதற்கான வங்கி தகவல்களை அனுப்புமாறு கேட்டுள்ளார். கொடுத்தார் பேடி. ஆனால், அவர் கணக்குக்குப் பணம் வரவில்லை. பிறகு அவர் மனைவியின் வங்கி கணக்கைக் கேட்டுள்ளார். கொடுத்தார். திடீரென அவர்மனைவியின் கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் பரிமாற்றம் செய்யப்பட்ட தகவல் தெரியவந்தது. உடனேபோன் செய்த அந்த நபர், தவறுதலாகநடந்துவிட்டது. திருப்பி அனுப்பிவிடுகிறேன்,அதற்கான நடைமுறைக்காக, இன்னும் ரூ.25 ஆயிரம் அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார். பிறகு மீண்டும் ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளார். இவை அனைத்தையும் சிறிது நேரத்தில் திருப்பிஅனுப்புவதாகக் கூறிய அவர், போனை ஆஃப் செய்துவிட்டார். பிறகு, தான் ஏமாற்றப்பட்டது ராகேஷ் பேடிக்கு தெரியவந்தது. இதுபற்றி அவர் ஓஷிவாரா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments