Vivetta Spring 2027: Not Too Sweet
The collection was brimming with sorbet colors, including pale yellow silk organza for a diaphanous trench, and peach satin for a slim dress with an elegant shawl collar. from Fashion

சென்னை: தனது கட்சிப் பெயரில் இலக்கணப் பிழை இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தமிழக வெற்றி‘க்’ கழகம் என்று அதிகாரபூர்வமாக மாற்றம் செய்துள்ளார் நடிகர் விஜய்.
கடந்த ஆண்டு முதலே அரசியல்ரீதியான நிகழ்வுகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்த நடிகர் விஜய், கடந்த பிப்.2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். முன்னதாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தார். விஜய்யின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Comments
Post a Comment