Featured
- Get link
- X
- Other Apps
சூர்யா, சுதா கொங்கரா இணையும் ‘புறநானூறு’ படப்பிடிப்பு குறித்த அப்டேட் - 2டி நிறுவனம் அறிவிப்பு

சென்னை: நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா இணையும் புதிய படமான ‘புறநானூறு’ படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை தயாரிக்கும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. சூர்யா மற்றும் சுதா கொங்கரா என இருவரும் இணைந்து இதனை அறிவித்துள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தேசிய விருதுகளையும் வென்றிருந்தது. இந்நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்து பணியாற்ற உள்ளதாக கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. ‘புறநானூறு’ என இந்த படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டது. இதில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Zegna and Elie Saab Leaders on Long-term Success in Family Businesses
- Get link
- X
- Other Apps
Net-a-porter Taps Three New York Labels for 2026 Vanguard Program
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment