Skip to main content

Featured

‘கங்கணம்’ படத்துக்காக 9 மாதங்கள் தலைமுடி வளர்த்த ஹீரோ

சென்னை: கூத்துப்பட்டறை சவுந்தர் நாயகனாக நடிக்கும் படம், ‘கங்கணம்’. கல்யாணி இ என்டர்பிரைஸ் சார்பாக கல்யாணி கே., சிரஞ்சன் கே.ஜி தயாரித்துள்ள இதில், அஸ்வினி சந்திரசேகர், பிரணா நாயகிகளாக நடிக்கின்றனர். சிரஞ்சன், சரவணன், சம்பத்ராம், அட்ரஸ் கார்த்திக், 'விஜய் டிவி' ராமர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.ஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்குச் செல்வா இசை அமைத்துள்ளார்.

படத்தை இயக்கியுள்ள அ.இசையரசன் கூறும்போது, “நாயகன் குடும்பத்தில் கொடூரமான சம்பவம் ஒன்றை வில்லன் செய்கிறார். ஒரு போலீஸ் அதிகாரியையும் அவமானப்படுத்தி விடுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தொல்லை கொடுக்கிறார். அவர்களில் ஐந்து பேர் குழுவாக இணைந்து பழிவாங்கக் கங்கணம் கட்டுகிறார்கள். அதைச் செய்தார்களா? இல்லையா? என்பது கதை. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்துக்காக 9 மாதங்கள் முடி வளர்த்து, கடும் உடற்பயிற்சி செய்து உடல் அமைப்பை மாற்றி இதில் சவுந்தர் நடித்துள்ளார்” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts