Featured
- Get link
- X
- Other Apps
லைவ் லொகேஷனில் ‘ஃபேமிலி படம்’ ஷூட்டிங்!

சென்னை: உதய் கார்த்திக், சுபிக்‌ஷா ஜோடியாக நடிக்கும் படத்துக்கு ‘ஃபேமிலி படம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். யுகே கிரியேஷன்ஸ் சார்பில் கே. பாலாஜி தயாரிக்கும் இந்தப் படத்தை செல்வகுமார் திருமாறன் இயக்குகிறார். விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஸ்ரீஜா, சந்தோஷ், மோகன சுந்தரம், ஆர்ஜே பிரியங்கா, ஜனனி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிவீ இசையமைக்கிறார்.
படம் பற்றி செல்வகுமார் திருமாறன் கூறும்போது: சென்னையில் வளர்ந்த 3 சகோதரர்களின் கதை. அதில் ஒருவர் தனது கனவை நோக்கி ஓடுகிறார். அவர் முயற்சி தொடர்ந்து தோல்வியில் முடிகிறது. ஒரு கட்டத்தில் குடும்பத்தினர் இணைந்து அவர் கனவை நனவாக்க, எப்படி உதவுகிறார்கள் என்பதுதான் படம். இது ஒரு ஃபீல்குட் படம். லிங்குசாமி இயக்கிய ‘ஆனந்தம்’ படம் நகரத்து பாணியில் இருந்தால் எப்படியிருக்குமோ அதுபோல குடும்ப மதிப்பையும் இந்தப் படம் பேசும். காமெடி, எமோஷன் கலந்து இருக்கும். கதைப்படி, நாயகி மதுரையை சேர்ந்த டீச்சர். நாயகன் சென்னையை சேர்ந்தவர். இருவரும் எப்படி இணைகிறார்கள் என்று இன்னொரு டிராக் இருக்கும். கதையில் ஹீரோ, வில்லன் என்று கிடையாது. பெரும்பாலும் லைவ் லொகேஷனில் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். ஒரு ஷெட்யூல் முடிந்திருக்கிறது” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Zegna and Elie Saab Leaders on Long-term Success in Family Businesses
- Get link
- X
- Other Apps
Net-a-porter Taps Three New York Labels for 2026 Vanguard Program
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment