Skip to main content

Featured

“வாய்ப்புக்காக 10 வருடம் சுற்றினேன்” - விமல் பட இயக்குநர் உருக்கம்

சென்னை: விமல் நாயகனாக நடித்துள்ள படம், ‘போகுமிடம் வெகுதூரமில்லை’. மெரி ரிக்கெட்ஸ், கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரித்துள்ளார். டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கியுள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் இயக்குநர் மைக்கேல் கே. ராஜா பேசியதாவது: இது எனது முதல் மேடை, இந்தக் கதையை வைத்துக்கொண்டு 10 வருடம் சுற்றியிருக்கிறேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கதையைக் கேட்டதும், செய்யலாம் என்றார். ஆனால் கரோனா வந்து 3 வருடத்தைத் தின்றுவிட்டது. பிறகு இப்போதைய சூழ்நிலையில் படம் செய்யும் எண்ணம் இல்லை, ஆனால் உனக்காகத் தயாரிக்கிறேன் என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments