Jason Wu Collection Spring 2027: A Focus on Beauty
Opting out of showing his collections via runway shows this year, Jason Wu approached his spring collection with a focus on returning to his feminine, slightly deconstructed codes. from Fashion

தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.சதீஷ்குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘ஃபயர்’. இதில் பாலாஜி முருகதாஸ், ரக்‌ஷிதா மகாலட்சுமி, சாந்தினி தமிழரசன், சாக் ஷி அகர்வால், காயத்ரி ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜே.எஸ். கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டிகே இசை அமைத்துள்ளார். சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி ஜே. சதீஷ்குமார் கூறியதாவது: ‘தங்கமீன்கள்’ படத்தின் அடுத்த பாகத்தை தயாரிக்க இருந்தேன். இயக்குநர் ராம், மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இந்தக் கதையை உருவாக்கி, நானே இயக்க முடிவு செய்தேன். இது நான்கு பெண்களைப் பற்றிய கதை. பெண் குழந்தைகளை ஆசையாக வளர்க்கிறோம். ஆனால், அவர்களைப் பாதுகாப்பாக வளர்க்கிறோமா என்பது கேள்விகுறிதான்.
Comments
Post a Comment