CFCL Offers a Knit and Neat Uniform for Men’s Fall 2025
Showcasing the men's line separately for the first time, designer Yusuke Takahashi offered the building blocks of a smart everyday uniform. from Fashion
சென்னை: நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கும் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதில் துல்கர் சல்மான் , நஸ்ரியா உட்பட பலர் நடிக்க இருந்தனர். இந்நிலையில் இந்தப் படத்துக்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதால் அதைத் தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.
இதையடுத்து, சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியானது. இதை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதில் சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜூன் 2-ம் தேதி அந்தமானில் தொடங்குகிறது. அங்கு 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
Comments
Post a Comment