Skip to main content

Featured

திரை விமர்சனம்: ரசவாதி

கொடைக்கானலில் சித்த மருத்துவராகவும் இயற்கை ஆர்வலராகவும் வாழ்ந்துவருகிறார் சதாசிவ பாண்டியன் (அர்ஜுன் தாஸ்). அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றும் சூர்யாவுக்கும் (தான்யா ரவிச்சந்திரன்) அவருக்கும் காதல். காவல் துறை ஆய்வாளர் பரசுராஜ் (சுஜித் சங்கர்), தன் வாழ்க்கை சீரழிந்ததற்கு சதாசிவமே காரணம் என்று கூறி அவர்கள் காதலைப் பிரிக்க முயல்கிறார். சதாசிவத்துக்கும் பரசுவுக்குமான முன்பகை என்ன? பரசுவின் வன்மத்தில் இருந்து காதலர்கள் தப்பித்தார்களா என்பது மீதிக் கதை.

‘மவுனகுரு’ (2011), ‘மகாமுனி’ (2019) என பாராட்டைப் பெற்ற படங்களைக் கொடுத்த இயக்குநர் சாந்தகுமாரின் 3-வது படம் இது. ஒரு நல்லவனுக்கும் சைக்கோ காவல் அதிகாரிக்கும் இடையிலான மோதல் என்னும் வழக்கமான கதைக் களத்தை எடுத்துக்கொண்டு அதை மாறுபட்ட அனுபவமாகக் கொடுக்க முயன்றிருக்கிறார். முதன்மைக் கதாபாத்திரங்களை வித்தியாசமான பின்னணியுடன் வடிவமைத்திருப்பது திரைக்கதைக்கு சுவாரஸியம் சேர்த்துள்ளது. கொடைக்கானலைக் கதைக் களமாகக் கொண்டதும் இதமான காட்சி அனுபவத்தைத் தருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments