
ஹாலிவுட் சினிமா நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார். அவருக்கு வயது 79. டைட்டானிக், தி லார்ட் ஆப் ஆஃப் தி ரிங்ஸ் போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் கடந்த 1944-ல் பெர்னார்ட் ஹில் பிறந்தார். நாடக கலையில் டிப்ளோமா முடித்தார். அதன் பின்னர் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். நாடகம், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். 1982-ல் வெளிவந்த காந்தி படத்தில் நடித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment