John Richmond Spring 2027: Pop Heaven
Dave Stewart, whose latest album is set for release on Oct. 30, performed — albeit briefly — following the show, with the designer singing a few notes. from Fashion

‘கூழாங்கல்’ படத்தை அடுத்து பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ள படம், ‘கொட்டுக்காளி’. சூரி, மலையாள நடிகை அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். நடிகர் சிவகார்த்தியேன் தயாரித்துள்ள இந்தப் படம் ஆக.23-ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி பி.வினோத்ராஜ் கூறியதாவது: நான் இயக்கிய ‘கூழாங்கல்’ இவ்வளவு வரவேற்பைப் பெறும் என்று நினைக்கவில்லை. அந்த நம்பிக்கையில் இதை இயக்கி இருக்கிறேன். ‘கொட்டுக்காளி’ என்பது தென் தமிழகத்தில் புழங்கும் மண் சார்ந்த ஒரு வார்த்தை. அதற்கு, பிடிவாதத்துடன் இருப்பது, தனக்கு விருப்பப்பட்டதை வெளிப்படையாகச் சொல்வது என்று அர்த்தம். இந்தக் கதைக்கு அது பொருத்தமாக இருந்தது. இதில் சேவலும் ஒரு கதாபாத்திரமாகப் படத்தில் வரும்.
Comments
Post a Comment