Featured
- Get link
- X
- Other Apps
தனுஷ் குறித்து பிரகாஷ் ராஜ் பெருமிதம் முதல் செல்வராகவன் பகிர்வு வரை @ ‘ராயன்’ இசை நிகழ்வு

சென்னை: “தனுஷின் அசுர வளர்ச்சியைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். அழகான வளர்ச்சி இது. இன்று ஓர் இயக்குநராக தனுஷ் வளர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது” என நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.
தனுஷ் தன்னுடைய 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் பேசுகையில், “10 கிலோ சதை, 15 கிலோ எழும்ப வைச்சு துள்ளிட்டு இருக்க என்று நான் ஒரு படத்தில் வசனம் பேசியிருந்தேன். அவர் இன்னும் துள்ளிட்டுதான் இருக்காரு. அவரது அசுர வளர்ச்சியைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். அழகான வளர்ச்சி இது. இன்று ஓர் இயக்குநராக தனுஷ் வளர்ந்து நிற்கிறார். ராயன் திரைப்படம் மிகவும் சுவாரஸ்யமான திரைப்படமாக இருக்கும். அதற்காக படக்குழு மிகுந்த முயற்சி எடுத்து படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக தனுஷின் வசனங்கள் படத்தில் மாஸாக இருக்கும்” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Zegna and Elie Saab Leaders on Long-term Success in Family Businesses
- Get link
- X
- Other Apps
Net-a-porter Taps Three New York Labels for 2026 Vanguard Program
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment