Skip to main content

Featured

ஸ்காட்லாந்தில் பட்டம் பெற்ற சனுஷா

தமிழில், வினயன் இயக்கிய நாளை நமதே, ரேனிகுண்டா, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை சனுஷா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் கதாநாயகியாக நடிக்க தொடங்கியவர். நடிப்பை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து விட்டு இவர், மீண்டும் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய மனநலம் (Global Mental Health) பற்றிய முதுகலை படிப்பை முடித்துப் பட்டம் பெற்றுள்ளார். இது குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், “2 வருட நீண்ட போராட்டம், குடும்பத்தைப் பிரிந்தது, அழுகை, தூக்கமில்லாத இரவுகள், பகுதிநேர, முழுநேர வேலைகள், கடின உழைப்பு, உடல்நலப் பிரச்சினைகள், மன அழுத்தம், ஒவ்வொரு உணர்ச்சியும் கடந்து வந்ததற்கு, இறுதியாக பலன் கிடைத்துவிட்டது. கடவுளுக்கு நன்றி” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments