Skip to main content

Featured

ஐமேக்ஸில் வெளியாகிறது விஜய்யின் ‘தி கோட்’ - ரசிகர்கள் உற்சாகம் 

சென்னை: விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments