Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

சென்னை: ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவில் முக்கிய மாற்றம் ஒன்றை செய்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. கடும் எதிர்மறை விமர்சனங்களை பெற்று, படமும் தோல்வியை தழுவியது. தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழியிலும் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் ‘இந்தியன் 3’ படத்தின் பணிகளை நிறுத்தி வைத்துவிட்டார் ஷங்கர். இப்போது முழுமையாக ‘கேம் சேஞ்சர்’ படத்தின் பணிகளை கவனித்து வருகிறார். இதில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதுவும் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன், எடிட்டராக ஷமீர் முகமது ஆகியோர் பணிபுரிந்து வந்தார்கள்.
Comments
Post a Comment