ஸ்வேதா மேனன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை!
பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன். இவர் தமிழில், நான் அவனில்லை 2, துணை முதல்வர், சிநேகிதியே, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ள இவர், மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட விண்ணப்பித்துள்ளார். வரும் 15-ம் தேதி, இதன் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பணத்துக்காக ஆபாசக் காட்சிகளில் நடித்துள்ளதாகக் கூறி, கொச்சி போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் பணத்துக்காக ஸ்வேதா மேனன் ஆபாசமாக நடித்ததாகவும் அக்காட்சிகளை சமூக ஊடகங்கள், ஆபாச தளங்களில் வெளியிட்டு வருமானம் ஈட்டியதாகவும் சமூக ஆர்வலர் மார்ட்டின் மெனச்சேரி என்பவர், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment