Doublet Spring 2027: Morning, Noon And Night
Masayuki Ino chronicled three moments in his kooky cast’s busy lives with his usual cleverness, a Puma collaboration and more innovative textiles to boot. from Fashion

மும்பை: “நான் சமீபத்தில் அஜித்தை சந்தித்தேன். அவர் என்னிடம், 'இப்ப தெரியுதா நான் ஏன் சிவாவை விடலைன்னு' என்று கூறினார். நீங்கள் ஒருமுறை சிவாவுடன் பணியாற்றினால், அவர் வேறொரு நடிகருடன் வேலை செய்வதைப் பார்க்க பொறாமைப்படுவீர்கள்” என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கங்குவா’. இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். பாலிவுட் நடிகை திஷா பட்டானி இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நட்டி, ரெட்டின் கிங்ஸ்லி, யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைத்துள்ளார். படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
Comments
Post a Comment