Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘வேட்டையன்’. லைகா தயாரித்துள்ளது. த.செ.ஞானவேல் இயக்கிய இந்தப் படம் 10-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதன் ‘சக்சஸ் மீட்’ சென்னையில் நடந்தது.
இயக்குநர் த.செ.ஞானவேல் பேசும் போது, “என் மீது நம்பிக்கை வைத்து, கதையம்சம் உள்ள படம் பண்ண வேண்டும் என்று ஆர்வத்தோடு என்னை இந்தப் படத்துக்குள் கொண்டு வந்த ரஜினிகாந்துக்கு நன்றி. ‘ஜெயிலர்’ ஹிட்டுக்கு பிறகு இப்படியொரு படம் பண்ணுவதற்கு தைரியம் வேண்டும். அதுதான் அவரை சூப்பர் ஸ்டாராக வைத்திருக்கிறது.
Comments
Post a Comment