Skip to main content

Featured

3BHK - திரை விமர்சனம்

சென்னையில் வசிக்கும் வாசுதேவனின் (சரத்குமார்) குடும்பம் அடிக்கடி வீடு மாறுகிறது. சொந்த வீடு வாங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்பதற்காக சிறுகச் சிறுக பணம் சேர்க்கிறார் வாசுதேவன். மனைவி சாந்தி (தேவயானி) தன் பங்குக்கு கை கொடுக்கிறார். மகன் பிரபு (சித்தார்த்) பெரியவனாகி குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்கிற கனவில், பெரிய பள்ளி, கல்லூரியில் படிக்க வைக்கிறார்கள். அண்ணனுக்காக அரசுப் பள்ளியில் படிக்கிறார் தங்கை ஆர்த்தி (மீதா ரகுநாத்). ஒருவருக்கொருவர் அனுசரணையாக வாழும் அந்தக் குடும்பத்தின் ஒரே கனவு சொந்த வீடு வாங்குவது. அது நிறைவேறியதா, இல்லையா என்பது கதை. நடுத்தரக் குடும்பங்களுக்குச் சொந்த வீடு, பெரும் கனவு என்பதால், அனைவருடனும் எளிதாக ’கனெக்ட்’ ஆகிற கதைக் களம் இது. அதை முடிந்தவரை சுவாரஸியமாகத் திரைக்கதையாக்கி இருக்கிறார், இயக்குநர் கணேஷ். வெறுமனே வீடு வாங்கும் கனவை மட்டும் சொல்லாமல், அதற்காக ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் எவ்வளவு போராடுகிறார்கள் என்பதைப் பல இடங்களில் உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருப்பது பலம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News...

Karate Kid: Legends ட்ரெய்லர் எப்படி? - மீண்டும் ஜாக்கி சான்!

1984ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தி கராத்தே கிட்’. ஒரு புதிய நகரத்துக்கு செல்லும் இளைஞன் ஒருவன் அங்குள்ள மற்ற இளைஞர்களால் துன்புறுத்தலுக்கு ஆளாகிறான். அவன் மேல் பரிதாபம் கொள்ளும் முதியவர் ஒருவர் அந்த இளைஞனை மிகச்சிறந்த கராத்தே வீரனாக மாற்றுவதே இதன் கதை.

இதன் பிறகு 1984ல் இதன் அடுத்தடுத்த 2 பாகங்கள், இதனைத் தொடர்ந்து சில அனிமேஷன் தொடர்கள், 2010ஆம் ஆண்டு வில் ஸ்மித் மகன் ஜேடன் ஸ்மித் - ஜாக்கி சான் நடித்த ‘கராத்தே கிட்’, நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘கோப்ரா கை’ என இப்படம் பல வடிவங்களில் உருவானது. இவை அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments