Skip to main content

Featured

ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் காலமானார்

ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் காலமானார். அவருக்கு வயது 67. பிரபல இயக்குநர் குவென்டின் டரான்டினோவின் ரிசர்வையர் டாக்ஸ், கில்பில், தி ஹேட்புல் எய்ட், ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர், மைக்கேல் மேட்சன். கலிபோர்னியாவின் மலிபு பகுதியில் வசித்து வந்த அவர், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 67. அவர் மறைவில் எந்த சந்தேகமும் இல்லை என்று லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை அறிவித்துள்ளது. மைக்கேல் மேட்சனின் மறைவு ஹாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘பன் பட்டர் ஜாம்’ படத்துக்காக பாடல் எழுதிய விஜய் சேதுபதி

ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இதில், ‘பிக் பாஸ்’ ராஜு கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். ரெய்ன் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கிறார். இந்தப்படத்துக்காக விஜய் சேதுபதி பாடல் ஒன்றை எழுதியுள்ளார். ‘ஏதோ பேசத்தானே... என் நெஞ்சுக்குள்ள ஆச வீசத்தானே...’ என்ற இந்தப் பாடலை நடிகர் சித்தார்த்தும் ஷில்பா ராவும் பாடியுள்ளனர்.

Source : www.hindutamil.in



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments