Featured
- Get link
- X
- Other Apps
ரூ.120 கோடி வரி செலுத்திய அமிதாப் பச்சன்!
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது 82 வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தில் நடித்திருந்தார். சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடித்து வரும் அவர் சின்னத்திரையில் ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இவர் 2024-25-ம் நிதியாண்டில் ரூ.350 கோடியை வருமானமாகப் பெற்றுள்ளார். இதற்காக அவர் ரூ.120 கோடியை அரசுக்கு வரியாக செலுத்தி இருக்கிறார். இதன் மூலம் இந்த வருடம் அதிக வருமான வரி செலுத்திய பிரபலமாக அமிதாப் பச்சன் இருக்கிறார்.
கடந்த ஆண்டு ஷாருக்கான், ரூ.92 கோடி வரி செலுத்தி, அதிக வருமான வரி கட்டிய பிரபலமாக இருந்தார். இந்த ஆண்டு அவரை, அமிதாப் பச்சன் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இவர் தவிர, நடிகர்கள் விஜய் ரூ.80 கோடியும் சல்மான் கான் ரூ.75 கோடியும் வரியாக செலுத்தியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Olivia Cheng of Dauphinette Wins Second Annual CFDA/Genesis House AAPI Design + Innovation Grant
- Get link
- X
- Other Apps
Gabriela Hearst Teams With Mytheresa to Celebrate Return to Paris Fashion Week
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment