Skip to main content

Featured

‘பேட் கேர்ள்’ பட டீசரை நீக்க கோரி வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு 

மதுரை: ‘பேட் கேர்ள் ’ பட டீசரை நீக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு, கூகுளின் இந்திய நிறுவன அதிகாரி பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை வெங்கடேஷ், ராம்குமார் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “கடந்த ஜன.26 - ல் யூடியூப் இணையத்தில் பேட் கேர்ள் என்ற திரைபட டீசர் வெளியானது. இந்த டீசரில் சிறுவர், சிறுமி ஆபாசமாக இருப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த டீசர் தற்போதும் ஆன்லைனில் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments