Skip to main content

Featured

தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தமிழில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை லோகன் என்ற புதுமுக இயக்குநர் இயக்க இருக்கிறார். இப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கதாநாயகனாக நடிக்க உள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்துக்கான அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் கிரிக்கெட் வீரர் ஷிவம் டுபே, இயக்குநர் மோகன் ராஜா, நடிகர் சதீஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜு பட ஷூட்டிங் தொடக்கம்

‘லவ் டுடே' படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பிரதீப் ரங்கநாதனின், ‘டிராகன்' படமும் தமிழ், தெலுங்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் விக்னேஷ் சிவனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இதை கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார்.

இதில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார். சரத்குமார், ஹிருது ஹரூன், டிராவிட் செல்வம் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments