Skip to main content

Featured

ஸ்வீட்ஹார்ட் - திரை விமர்சனம்

பெற்​றோரின் பிரி​வால், திரு​மணம், குடும்​பம் என்​ப​தில் நம்​பிக்கை இல்​லாதவ​னாக இருக்​கிறான் வாசு (ரியோ ராஜ்). அப்​பா​வும் தாத்​தா​வும் ஆணா​திக்​க​வா​தி​களாக இருந்​தா​லும் குடும்ப அமைப்​பின் நன்​மையை உணர்ந்து வளர்ந்​தவள் மனோ (கோபிகா ரமேஷ்). காதலில் விழும் இரு​வரும் பின்​னர் ‘பிரேக்​-அப்’ என்று பேசிப் பிரிய, அடுத்த சில நாள்​களில் மனோ கர்ப்​ப​மாக இருப்​பது உறு​தி​யாகிறது. அதைக் கலைத்​து​விட வற்​புறுத்​துகிறான் வாசு. அதற்கு மனோ ஒப்​புக்​கொண்​டாளா, இல்​லையா என்​பது கதை.

ஓர் அறி​முக இயக்​குநர் தன்​னுடைய முதல் படைப்​பைச் சமூகத்​தின் மேன்​மைக்​காகக் கொடுக்க வேண்​டும் என்​ப​தில் உறு​தி​யாக இருந்து அதற்​காகப் போராடி உரு​வாக்​கு​வது தமிழ் சினி​மா​வில் அபூர்​வ​மாக நிகழும் சம்​பவம். அப்​படியொரு சம்​பவத்​தைச் செய்​திருக்​கிறார் ஸ்வினீத் எஸ். சுகு​மார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments