Skip to main content

Featured

‘பெப்சி’க்கு எதிராக புதிய அமைப்பு: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

தமிழ்த் திரைப்பட தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​துக்​கும் தென்​னிந்​திய திரைப்பட தொழிலா​ளர்​கள் சம்​மேளன​மான ‘பெப்​சி’க்கும் கடந்த சில மாதங்​களாக மோதல் போக்கு ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்து பெப்சி அமைப்​பு, நடப்பு தயாரிப்​பாளர் சங்​கத்​துடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. இந்​நிலை​யில் ‘பெப்​சி’ க்கு எதி​ராக புதிய திரைப்​படத் தொழிலா​ளர்​கள் அமைப்​பை, தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர் சங்​கம் தொடங்​கி​யுள்​ளது.

இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த தயாரிப்​பாளர் சங்​கத் தலை​வர் முரளி என் ராம​சாமி, பொதுச் செய​லா​ளர்​கள் ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் கூறிய​தாவது: தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர் சங்​கத்​தின் செயற்​குழு கூட்​டம் நேற்று நடந்​தது. எங்​கள் சங்​க​மும் பெப்சி அமைப்​பும் சுமார் 50 வருடங்​களாகத் தொழில் ஒத்​துழைப்​பில் ஈடு​பட்டு வந்​தோம். சில காரணங்​களால் அவர்​கள் எங்​கள் சங்​கத்​துக்கு ஒத்​துழைப்பு தரு​வ​தில்லை என்று கூறி நடப்​புத் தயாரிப்பு சங்​கத்​துடன் ஒப்​பந்​தம் செய்​துள்​ளார்​கள். நாங்​கள் பலமுறை பேச்​சு​வார்த்தை நடத்​தி​யும் அவர்​கள் அதற்கு உடன்​பட​வில்​லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments