Skip to main content

Featured

தமிழ் சினிமாவில் மைல்கல் ஆகிறதா ‘கூலி’ பிசினஸ்?

‘கூலி’ படத்தின் வெளிநாட்டு வியாபாரம் தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமையும் என்று கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அற்புதமான படம்: இயக்குநர் ராஜமவுலி பாராட்டு!

சசிகுமார், சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துக்கு இயக்குநர் ராஜமவுலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ள அவர், “மிகவும் அற்புதமான ஒரு படத்தைப் பார்த்தேன். மனதுக்கு இதமான படத்தில் சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் இடம்பெற்றிருந்தது. தொடக்கம் முதல் இறுதி வரை என்னை ஆர்வத்துடன் வைத்திருந்தது. அபிஷன் ஜீவிந்தின் மிகச்சிறந்த எழுத்து மற்றும் இயக்கம். சமீபத்திய ஆண்டுகளில் சிறந்த சினிமா அனுபவத்திற்கு நன்றி. தவறவிடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments