Skip to main content

Featured

ஜூன் 27-ம் தேதி வெளியாகிறது ‘லவ் மேரேஜ்’

விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ’இறுகப்பற்று’ படத்துக்குப் பின் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் ‘ரெய்ட்’. அப்படம் பெரியளவில் எடுபடவில்லை. அதனைத் தொடர்ந்து தனது அடுத்த பட வெளியீட்டுக்கு தயாராகிவிட்டார் விக்ரம் பிரபு. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அடுத்து ‘குஷி’, ‘சிவகாசி’ ரீ-ரிலீஸ்: தயாரிப்பாளர் தகவல்

அடுத்ததாக ‘குஷி’ மற்றும் ‘சிவகாசி’ படங்களை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.

2024-ம் ஆண்டு புதிய படங்களுக்கு இணையாக ரீ-ரிலீஸில் வசூலை அள்ளிய படம் ‘கில்லி’. இப்படத்தினை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். ரீ-ரிலீஸ் விநியோக உரிமையினை கைப்பற்றி வெளியிட்டார் சக்திவேலன். தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரீ-ரிலீஸிலும் வெற்றியடைந்தது தொடர்பாக விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments