Skip to main content

Featured

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 90 பேருக்கு ‘கலைமாமணி’ விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் 

சென்னை: தமிழ்​நாடு இயல் இசை நாடக மன்​றம் சார்​பில் கடந்த 2021, 2022, 2023-ம் ஆண்​டு​களுக்​கான ‘கலை​மாமணி’ விருதுகளை 90 கலைஞர்​களுக்கு முதல்​வர் ஸ்டா​லின் வழங்​கி​னார். நமது கலைஞர்​கள் இங்கு மட்​டுமின்​றி,உலகம் முழு​வதும் சென்று தமிழ்க் கலைகளை பரப்ப வேண்​டும் என்று அவர் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

தமிழ்​நாடு இயல் இசை நாடக மன்​றம் சார்​பில், 2021, 2022, 2023-ம் ஆண்​டு​களுக்​கான ‘கலை​மாமணி’ விருதுகள் வழங்​கும் விழா சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. அகில இந்​திய விருது பெறும் கலை வித்​தகர்​களுக்​கான பார​தி​யார் விருதை (இயல்) ந.முரு​கேச பாண்​டியனுக்​கும், எம்​.எஸ்​.சுப்​புலட்​சுமி விருதை (இசை) கே.ஜே.யேசு​தாஸுக்​கும், பாலசரஸ்​வதி விருதை (நாட்​டி​யம்) முத்​துகண்​ணம்​மாளுக்​கும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வழங்​கி​னார். யேசு​தாஸ் சார்​பில் அவரது மகன் விஜய் யேசு​தாஸ், விருதை பெற்​றுக் கொண்​டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments