Skip to main content

Featured

சம்சாரம்: ‘அம்மா பசிக்குதே’ பாடல் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ‘கல்கி’

என்​.டி.​ராம​ராவ், நாகேஸ்வர ராவ் நடித்​து, எல்​.​வி.பிர​சாத் தெலுங்​கில் இயக்​கிய ‘சம்​சா​ரம்’, வெற்றிபெற்​றதை அடுத்​து, அந்​தப் படத்தைத் தனது ஜெமினி ஸ்டூடியோ ஊழியர்​கள், அவர்​கள் குடும்​பத்​தினர், நண்​பர்​களுக்​குத் திரை​யிட்​டுக் காண்​பித்​தார், எஸ்​.எஸ்​.​வாசன். படத்​தைப் பார்த்த அவர்​கள் உருகி அழுதனர்.

இதையடுத்து அந்தப் படத்​தின் தமிழ், இந்தி உரிமையை வாங்​கிய அவர், இரண்டு மொழி​யிலும் ஒரே நேரத்​தில் ரீமேக் செய்​தார். கதை​யில் தமிழுக்கு ஏற்ப சின்ன சின்ன மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டன. ஜெமினி​யின் ‘சந்​திரலே​கா’ இந்​தி​யில் பெரும் வரவேற்​பைப் பெற்​ற​தால், தமிழ் நடிகர்​களை இந்​திப் பார்​வை​யாளர்​கள் ஏற்​றுக்​கொள்​வார்​கள் என்று நம்​பி​னார், வாசன். ஒரே செட், உடைகள் போன்​றவை இரண்டு படங்​களுக்​கும் போதும் என்​ப​தால், சிக்​க​ன​மாகப் படத்தை உரு​வாக்க முடிந்​தது. ஆனால், பெரும்​பாலான தென்​னிந்​திய நடிகர்​களுக்கு இந்தி தெரி​யாது என்​ப​தால் டப்​பிங் கலைஞர்​களைப் பயன்​படுத்த முடிவு செய்​தார்​கள். இதற்​காகவே, ஹாலிவுட் பாணி டப்​பிங் ஸ்டூடியோவை அமைத்​தார் வாசன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments