Skip to main content

Featured

மகாபாரதம் டி.வி தொடரில் கர்ணனாக நடித்த பங்கஜ் தீர் காலமானார்

புதுடெல்லி: பி.ஆர்​.சோப்​ரா​வின் 1988-ம் ஆண்டு தொலைக்​காட்சி தொட​ரான மகா​பாரத்​தில் கர்​ணன் கதா​பாத்​திரத்​தில் நடித்து மிக​வும் பிரபல​மான நடிகர் பங்​கஜ் தீர் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 68.

புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்ட பங்​கஜ் தீர், கடந்த சில மாதங்​களாக மருத்​துவ சிகிச்சை பெற்று வந்​தார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்​தார். சந்​திர​காந்​தா, பதோ பாகு, கானூன் போன்ற தொலைக்​காட்​சித் தொடர்​களி​லும் சோல்​ஜர், ஆண்​டாஸ், பாட்ஷா உள்​ளிட்ட பல்​வேறு திரைப் படங்​களி​லும் அவர் நடித்​துள்​ளார். இவரது மகன் நிகி​தின் தீர், மரு​மகள் கிராத்​திகா செங்​கரும் நடிகர்​கள் ஆவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments