Skip to main content

Featured

கும்மடி நரசைய்யா பயோபிக் படத்தில் சிவராஜ்குமார் 

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த இடதுசாரி தலைவரான கும்மடி நரசைய்யா வாழ்க்கை வரலாற்று படத்தில் சிவராஜ்குமார் நடிக்க உள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

1983 முதல் 1994 வரையிலும், பின்னர் 1999 முதல் 2009 வரையிலும் ஒருங்கிணைந்த ஆந்திராவில் (தற்போதைய தெலங்கானா) சுயேச்சை வேட்பாளராக, பலமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் கும்மடி நரசைய்யா. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் தொடர்ந்து சுயேச்சையாகவே தேர்தலை எதிர்கொண்டார். எளிய மக்களின் நலனுக்காக தன்னலமின்றி உழைத்த இவரது, நேர்மையான எளிமையான வாழ்க்கையால், மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments