Skip to main content

Featured

அந்த காலத்திலேயே ஒரே ஷாட்டில் ஒரு பாடல்

பிரபல பிரெஞ்சு எழுத்​தாளர் விக்​டர் ஹ்யூகோ​வின் ‘லெஸ் மிஸரபிள்​ஸ்’, 19-ம் நூற்​றாண்​டின் சிறந்த ஐரோப்​பிய நாவல்​களின் வரிசை​யில் ஒன்​றாகப் பேசப்​பட்​டது. பல்​வேறு மொழிகளில் மொழிபெயர்க்​கப்​பட்​டுள்ள இந்​நாவல், பல மொழிகளில் திரைப்​பட​மாக​வும் சின்னத்​திரை தொட​ராக​வும் மேடை நாடக​மாக​வும் மாற்​றம் பெற்​றிருக்​கிறது. இந்​நாவலை சுத்​தானந்த பார​தி​யார் தமிழில் மொழி​யாக்​கம் செய்​திருந்​தார். அதன் அடிப்​படை​யில் உரு​வாக்​கப்பட்ட திரைப்​படம், ‘ஏழை படும் பாடு’.

திருட்டு வழக்​குக்​காகச் சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருக்​கும் கந்​தனை, போலீஸ் இன்​ஸ்​பெக்​டர் ஜாவர் மீண்​டும் கைது செய்​கிறார். ஒரு கிறிஸ்தவ பேராயர் அவனுக்கு உதவுவ​தால், கந்​தன் வாழ்க்​கை​யில் மாற்​றம் ஏற்​படு​கிறது. அவன் ஒரு தொழிற்​சாலை ஆரம்​பிக்​கிறான். தனது அடை​யாளத்தை மாற்றி உயரும் அவன், ஒருநாள் அந்​நகரத்​தின் மேய​ராகிறான். அவன் பழைய குற்​ற​வாளி என்​ப​தைத் தெரிந்து கொள்​ளும் இன்​ஸ்​பெக்​டர் ஜாவர், அவனை மிரட்​டு​கிறார். ஒரு கட்​டத்​தில் ஜாவரின் உயிரைக் காப்​பாற்​றுகிறான் கந்​தன். பிறகு என்ன நடக்​கிறது என்​பது கதை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments